Automobile Tamilan

பிஎம்டபிள்யூ குழுமத்தின் இந்திய தலைவராக ருத்ரதேஜ் சிங்

g310 r

முன்னாள் ராயல் என்ஃபீல்டு தலைவராக செயல்பட்டு வந்த ருத்ரதேஜ் சிங், இனி பிஎம்டபிள்யூ குழுமத்தின் கீழ் செயல்படும் பிஎம்டபிள்யூ, பிஎம்டபிள்யூ மோட்டார்டு மற்றும் மினி கார் நிறுவனங்களின் இந்திய தலைவராக ஆகஸ்ட் 1, 2019 முதல் செயல்பட உள்ளார்.

25 ஆண்டுகால ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோமொபைல் சாராத துறைகளில் அனுபவமிக்கவராக விளங்கும் ருத்ரேஜ் சிங், முன்பாக பிரபலமான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விளங்கியவர். கடந்த ஜனவரி மாதம் என்ஃபில்டு நிறுவனத்திலிருந்து வெளியேறினார்.

பிஎம்டபிள்யூ குழும இந்திய தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து, பிஎம்டபிள்யூ குழுமத்தின் பிராந்திய ஆசியா-பசிபிக், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா துனை தலைவராக விளங்கும் ஹென்ட்ரிக் வான் குன்ஹெய்ம் கூறுகையில்,  பி.எம்.டபிள்யூ குழும இந்தியாவின் தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ருத்ரதேஜ் சிங்கை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பி.எம்.டபிள்யூ குழுமத்தின் முன்னுரிமை சந்தையாக விளங்கும் இந்தியா, ஆடம்பர வாகனப் பிரிவின் எதிர்கால வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான பணிகளை மேற்கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பல்வேறு தொழில்துறை பிரிவுகளில் பணியாற்றிய திரு. சிங், அடிப்படை நுகர்வோர் நுண்ணறிவு, ஒரு மாற்றத்தக்க தலைமை அணுகுமுறை மற்றும் இந்தியாவில் பிஎம்டபிள்யூ குழுமத்தின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் புதிய சிந்தனை ஆகியவற்றின் மிக ஆழமான புரிதலைக் கொண்டுள்ளார், ”என்று வான் குயின்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version