Automobile Tamilan

ஃபிளிப்கார்ட்டில் ராயல் என்ஃபீல்டு 350cc பைக்குகளை வாங்கலாம்.!

2025 royal enfield meteor 350 grey 1

ராயல் என்ஃபீல்டின் பிரசத்தி பெற்ற புல்லட் 350, கிளாசிக் 350, ஹண்டர் 350, கோன் கிளாசிக் 350 மற்றும் சமீபத்திய மீட்டியோர் 350 போன்ற 350cc பைக்குகளை ஆன்லைனில், வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்ய முடியும்.

முதற்கட்டமாக பெங்களூரு, குருகிராம், கொல்கத்தா, லக்னோ, மும்பை போன்ற நகரங்களில் மட்டும் கிடைக்க உள்ளது. மற்ற நகரங்கள் 450cc, 650cc போன்ற வரிசையில் உள்ள மாடல்கள் எதிர்காலத்தில் கிடைக்கலாம்.

விற்பனைக்கு ராயல் என்ஃபீல்ட் 350சிசி மோட்டார் சைக்கிளை வாங்கத் தேர்வுசெய்யும் வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 22, 2025 முதல் முழு ஜிஎஸ்டி சலுகைகளை வழங்க உள்ளது.

ஐஷர் மோட்டார்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் மற்றும் ராயல் என்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரி பி. கோவிந்தராஜன், “ராயல் என்ஃபீல்டில், ப்யூர் மோட்டார்சைக்கிள் அனுபவத்தை அதிக ரைடர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதே எங்கள் நோக்கமாகும். ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து இன்றைய டிஜிட்டல் முதல் வாடிக்கையாளர்களைச் சந்திக்க எங்களுக்கு உதவுகிறது. மோட்டார் சைக்கிள்களை ஆன்லைனில் ஆராய்ந்து வாங்குவதற்கு எளிமையான, வசதியான வழியைக் கோருகிறார்கள். தற்போது ஐந்து நகரங்களில் கிடைக்கிறது, மேலும் விரைவில் மேலும் பல நகரங்களில் கிடைக்கிறது என குறிப்பிட்டார்.

Exit mobile version