Automobile Tamilan

41-44 hp சந்தையில் நுழைந்த குபோட்டா MU4201 டிராக்டர் அறிமுகம்

kubota mu4201 tractor

ஜப்பானில் வடிவமைக்கப்பட்டு இந்திய விவசாயிகளுக்கு ஏற்ற எஸ்கார்ட்ஸ் குபோட்டா டிராக்டர் நிறுவனத்தின் புதிய 41-44 hp சந்தையில் வெளியிடப்பட்டுள்ள  MU4201 டிராக்டரில் பல்வேறு விவசாய பயன்பாடுகள், போக்குவரத்து உட்பட, ரோட்டவேட்டர்கள் மற்றும் டிஸ்க் ஹாரோக்கள் போன்ற கருவிகளுடன் இணக்கமான பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்குகின்றது.

ஆல் வீல் டிரைவ் வசதி பெற்ற 2 434 cc எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்ச பவர் 42hp வெளிப்படுத்தும் நிலையில் ஜப்பானிய லிப்ட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிதாக உருவாக்கப்பட்ட ‘பாம்பா லிஃப்ட்’ ஹைட்ராலிக் அமைப்பை பெற்று இது 1640–2100 கிலோ சுமை தூக்கும் திறன் மற்றும் 455 மிமீ லிப்ட் உயரம் கொண்டுள்ளதால் இந்நிறுவனம் அதன் பிரிவில் சிறந்ததாகக் கூறுகிறது.

மேம்படுத்தப்பட்ட MU4501 மற்றும் MU5502 மாதிரிகள், பல பயன்பாடுகளுக்கு வலுவான ஹைட்ராலிக் செயல்திறன் தேவைப்படும் விவசாயிகளை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்கார்ட்ஸ் குபோடா தற்போது ஃபார்ம்ட்ராக் மற்றும் பவர்ட்ராக் உள்ளிட்ட பிராண்டுகளின் கீழ் இயங்குகிறது, மேலும் வலுவான தேவை உள்ள பிரிவுகளைப் பயன்படுத்த அதன் குபோடா வரிசையை விரிவுபடுத்துகிறது. புதிய வெளியீடுகள் அதன் தற்போதைய தயாரிப்பு வரம்பை நிறைவு செய்வதாகவும், இந்தியாவின் முக்கிய டிராக்டர் வகைகளில் சந்தைப் பங்கை அதிகரிப்பதற்கான அதன் உத்தியுடன் ஒத்துப்போவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version