Automobile Tamilan

ஹைட்ரஜன் வாகனங்களுக்கு நெம்பர் பிளேட் நிறங்கள் தெரியுமா.?

ஹைட்ரஜன் வாகனங்களுக்கு நெம்பர் பிளேட்
Gemini AI generated Image

இந்தியாவின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கையில், ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு என பிரத்தியேக பதிவு எண் பிளேட்டை கொண்டு வரவுள்ளதை வெளியிட்டுள்ளது.

ஹைட்ரஜன் எரிபொருள் ( Hydrogen fuel-operated vehicles) மூலம் இயக்கப்படுகின்ற வணிகரீதியா பயண்பாடுகளுக்கான வர்த்த வாகனமாக இருந்தால், நம்பர் பிளேட்டின் மேல் பாதி பச்சை நிறத்திலும், கீழ் பாதி நீல நிறத்திலும் இருக்கும், அதே நேரத்தில் பிளேட்டில் உள்ள எண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

தனிநபர் பயன்பாட்டிற்கான வாகனமாக இருந்தால், நம்பர் பிளேட்டின் மேல் பாதி பச்சை நிறத்திலும், கீழ் பாதி நீல நிறத்திலும் இருக்கும், ஆனால் எண்கள் மற்றும் எழுத்துகள் வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும்.

வாடகைக்கு எடுக்கப்பட்ட டாக்ஸிகளில், நம்பர் பிளேட்டின் மேல் பாதி கருப்பு நிறத்திலும், கீழ் பாதி நீல நிறத்திலும் இருக்கும், பிளேட்டில் உள்ள எண் மற்றும் எழுத்துகள் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

இந்தியாவில் தற்பொழுது நெம்பர் பிளேட்களில் பல்வேறு நிற மாறுபாடுகளை ICE, EV,  தனிநபர் மற்றும் வர்த்தக வாகனங்கள் என செயற்படுத்தி வருகின்றது.

Exit mobile version