Automobile Tamil

ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 9% அதிகரிப்பு – மே 2023

இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், மே 2023-ல் 508,309 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

மே 2022ல் 466,466 எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. ஆனால் ஏற்றுமதி சந்தையில் மே 2022-ல் 20,238 எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது கடந்த மாதம் 11,165 எண்ணிக்கையை பதிவு செய்து 45 சதவீதம் ஏற்றுமதி சரிந்துள்ளது.

Hero Motocorp Sales Report – May 2023

ஹீரோ நிறுவனம் 489,336 எண்ணிக்கையில் மோட்டார்சைக்கிள்களை விற்றுள்ளது. மே 2022-ல் 452,246 எண்ணிக்கை விற்பனையானது, இது 8.2 சதவீதம் அதிகமாகும். கடந்த மாதம், ஹீரோ மோட்டோகார்ப் OBD-II & E20 இணக்கமான எக்ஸ்பல்ஸ் 200 4V மாடலை அறிமுகப்படுத்தியது.

இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர் விற்பனை, மே 2023-ல் 30,138 எண்ணிக்கையாக குறைந்துள்ளது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 34,458 வாகனங்களாக இருந்தது.

வரும் மாதங்களில் விற்பனை வளர்ச்சி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வாடிக்கையாளர்களின் உணர்வுகளின் அதிகரிப்பு, சாதாரண பருவமழை பற்றிய முன்னறிவிப்பு மற்றும் பிரீமியம் பிரிவில் புதிய அறிமுகங்கள் ஆகியவற்றால் உந்தப்படும்” என்று ஹீரோ மோட்டோகார்ப் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version