Automobile Tamilan

ஏதெர் எனர்ஜியில் முதலீட்டை அதிகரிக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

hero motocorp ather energy

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 36.7 சதவீதத்தில் இருந்து 39.7 சதவீதமாக உயர்த்தி, ஏதெர் எனர்ஜியில் கூடுதலாக ரூ.140 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஹீரோ மற்றும் GIC ஆகிய நிறுவனங்களிடமிருந்து ரூ.900 கோடி முதலீட்டை ஏதெர் பெற்றிருந்தது.

ஏதெர் நிறுவனம் 450 அபெக்ஸ் என்ற பெயரில் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு ஜனவரி மாதம் வெளியிட உள்ளது.

Hero Motocorp & Ather Energy

நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் தொடர்ந்து முன்னணி எலக்ட்ரிக் டூ வீலர் தயாரிப்பாளரான ஏதெர் எனர்ஜியில் முதலீட்டை அதிகரித்து வருகின்றது.

FY2023 நிதியாண்டில், ஏதெர் எனர்ஜி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது, FY2022 இல் இருந்த ரூ.413 கோடியுடன் ஒப்பிடுகையில் ரூ.1,806 கோடி வருவாய் ஈட்டியது. டிசம்பர் 15, 2023க்குள் 100,416 இ-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு, நாட்டின் முதல் நான்கு மின்சார இருசக்கர வாகன விற்பனையாளர்களில் ஒன்றாக ஏதெர் எனர்ஜி உள்ளது.

சமீபத்தில் இரு நிறுவனங்களும் ஏதெர் கொண்டுள்ள 1500 ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் மற்றும் விடா பெற்றுள்ள 400 சார்ஜிங் மையங்களையும் ஒன்றுக்கு ஒன்று பகிர்ந்து கொள்ள  உள்ளது.

Exit mobile version