Automobile Tamilan

பிஎஸ்6 ஹோண்டா ஆக்டிவா 125 & எஸ்பி 125 விற்பனையில் சாதனை

activa 125

இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 6 நடைமுறை ஏப்ரல் 1, 2020 முதல் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் ஹோண்டா ஆக்டிவா 125 மற்றும் ஹோண்டா எஸ்பி 125 என இரு மாடல்களிலும் பிஎஸ்6 என்ஜினுடன் விற்பனை செய்யப்படும் நிலையில், 60,000க்கு அதிகமான பிஎஸ்6 மாடல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஹோண்டாவின் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6 மாடல் மற்றும் நவம்பரில் வெளியான ஹோண்டா எஸ்பி 125 என இரண்டு மாடல்களும் பல்வேறு புதிய நுட்பங்களை பெற்றுள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 26 க்கு மேற்பட்ட காப்புரிமை பெறப்பட்ட நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது.

எஸ்பி 125 பைக் என்ஜின்

ஹோண்டாவின் eSP (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஹோண்டா SP125 ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் டார்க் 10.9 என்எம் ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆக்டிவா 125 என்ஜின்

ஹோண்டாவின் eSP (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 10.3 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 13 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version