Automobile Tamilan

ஜெனரல் மோட்டார்ஸ் ஆலையை வாங்கும் ஹூண்டாய் இந்தியா

hyundai gm plant

இந்தியாவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலேகோன் ஆலையை ஹூண்டாய் நிற்றுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஜிஎம் இந்தியாவில் தனது விற்பனை நிறுத்திக் கொண்டது.

குஜராத் மாநிலத்தில் அமைந்திருந்த ஜிஎம் செவர்லே ஆலையை SAIC குழுமத்தின் எம்ஜி மோட்டார் வாங்கி நிஙையில், புனே அருகே அமைந்துள்ள ஜிஎம் தலேகோன் ஆலை ஹூண்டாய் வாங்க உள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 1.30 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாகும்.

Hyundai India

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) மகாராஷ்டிராவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவின் தலேகான் ஆலையுடன் தொடர்புடைய அடையாளம் காணப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்துதல் மற்றும் சொத்து கொள்முதல் ஒப்பந்தத்தில் (APA) கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் நிலம் மற்றும் கட்டிடங்கள் மற்றும் சில இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களை கையகப்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.  இந்த ஆண்டின் இறுதிக்குகள் ஆலையை முழுமையாக ஹூண்டாய் கையகப்படுத்தும்.

2025 ஆம் ஆண்டில் தலேகான் ஆலையில் உற்பத்தி நடவடிக்கைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஹூண்டாய் குறிப்பிட்டுள்ள நிலையில் திருப்பெரும்புதூர் மற்றும் தலேகான் ஆலைகள் இரண்டையும் சேர்த்து ஆண்டுக்கு 10 லட்சம் யூனிட்கள் உற்பத்தித் திறனை ஒட்டுமொத்தமாக எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

APA கையொப்பத்தை பற்றி பேசிய, ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. அன்சூ கிம், “இந்த ஆண்டுடன் இந்திய சந்தையில் 27 ஆண்டுகால செயல்பாட்டைக் கொண்டாடும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவிற்கு இந்த ஆண்டு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில், HMIL திறன் விரிவாக்கம் மற்றும் மின்சார வாகனங்களுக்கான அமைப்பை நிறுவுவதற்காக தமிழ்நாட்டில் ரூ. 20,000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) செய்துள்ளோம்.

தற்பொழுது மகாராஷ்டிராவின் தலேகானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கான மேம்பட்ட உற்பத்தி மையத்தை உருவாக்க உத்தேசித்துள்ளோம் என குறிப்பிட்டார்.

Exit mobile version