Automobile Tamilan

ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை

hyundai exter knight edition

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் வெளியிட உள்ள ஐபிஓ எனப்படுகின்ற பொதுப் பங்கு வெளியீடு மூலம் ரூ.27,870.16 கோடியை ஆஃபர் ஃபார் சேல் முறையில் சுமார் 14.22 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு பங்கின் விலை ₹1865 முதல் ₹1960 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஒரு பங்கின் முக மதிப்பு ரூபாய் 10 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

Hyundai Motor IPO

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்குகின்ற ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ஐபிஓ வெளியீடு மூலம் திரட்ட உள்ள நிதியை தனது எதிர்கால வளர்ச்சிக்கும் மற்றும் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகத்திற்கும் பயன்படுத்த உள்ளது.

ஆங்கர் முதலீட்டாளர்கள் பங்குகளை அக்டோபர் 14 ஆம் தேதி ஏலம் எடுக்கலாம், அதே நேரத்தில் வெளியீடு அக்டோபர் 15 ஆம் தேதி பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு அக்டோபர் 17 ஆம் தேதி முடிவடையும்.

50% தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு,15% நிறுவனம் அல்லாத வாங்குபவர்களுக்கு மற்றும் சில்லறை வாங்குபவர்களுக்கு 35% வரை ஒதுக்கப்பட உள்ளது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் இரண்டாவது பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக விளங்கும் நிலையிலும் கடும் சவால் இணை தற்போது மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் மூலம் எதிர்கொண்டு வருகின்றது.

இதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் கடும் சவால் ஆனது அதிகரிக்கும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் கிரெட்டா இவி ஜனவரி 2025-ல் விற்பனைக்கு வெளியாக உள்ள நிலையில் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை இந்த மாடல் மூலம் ஹூண்டாய் எதிர்பார்த்து வருகின்றது.

ஹூண்டாய் இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாடுகளுக்கும் கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றது. ஏற்றுமதி சந்தையை விரிவுப்படுத்தி வருகின்றது. மிக நீண்ட கால அடிப்படையில் இந்த பங்குகளை தேர்ந்தெடுப்பது நல்லதொரு வாய்ப்பாக அமையலாம்.

Exit mobile version