Automobile Tamilan

ஜூன் 2023-ல் 2 % வளர்ச்சி அடைந்த ஹூண்டாய் இந்தியா

2023 Hyundai Grand i10 Nios

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், ஜூன் 2023-ல் 50,001 விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதம் ஒப்பீடுகையில் 49,001 எண்ணிக்கை பதிவு செய்து 2 சதவிகித வளர்ச்சி பெற்றுள்ளது.

ஜூன் மாதத்தில் ஏற்றுமதி 17 சதவீதம் அதிகரித்து 15,600 எண்ணிக்கையாகவும்,, இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 13,350 எண்ணிக்கை பதிவு செய்திருந்தது.

Hyundai Motor India Sales Report – June 2023

ஜூன் 2023 விற்பனை குறித்து அறிக்கையில், எங்கள் தயாரிப்புகள் அனைத்திற்கும் ஒரு நேர்மறையான வாடிக்கையாளர் ஈர்ப்பு உள்ளது. CY23-ல் முதல் பாதியில் வெர்னா, க்ரெட்டா மற்றும் டூஸான் ஆகியவை பிரிவுகளில் முதன்மையான இடத்தை அடைந்துள்ளன” என்று தருண் கார்க் குறிப்பிட்டார். இந்நிறுவனம் வரும் ஜூலை 10 ஆம் தேதி ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவி மாடலை ரூ.7 லட்சம் விலைக்குள் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.

Q2 CY2023 (ஏப்ரல்-ஜூன் 2023) 148,303 யூனிட்களின் விற்பனை பதிவு செய்துள்ளது. Q1 CY2023-ல் விற்பனையான 147,707 யூனிட்களில் 0.40% மட்டுமே அதிகமாகும்.

Exit mobile version