Automobile Tamilan

இந்தியாவில் 42 நாட்களில் 37.93 லட்சம் வாகனங்களை விற்பனை

இந்தியாவின் பண்டிகை காலம் எனப்படுகின்ற நவராத்திரி முதல் துவங்கி தீபாவளி, தந்தேராஸ் வரையிலான 42 நாட்களில் ஒட்டுமொத்த வாகன விற்பனை 37.93 லட்சம் ஆக பதிவு செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 18.73 % வளர்ச்சி அடைந்துள்ளது.

குறிப்பாக, மற்ற அனைத்து பிரிவுகளும் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் டிராக்டர் விற்பனை 0.44 % சரிவடைந்துள்ளது.

Indian Festive Sales

FY2023 ஆம் நிதியாண்டின் 42 நாள் பண்டிகைக் காலத்தில் வாகன விற்பனை 37.93 லட்சமாக உயர்ந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு 31.95 லட்சத்தில் இருந்து 18.73% வளர்ச்சி அதிகமாகும்.

பயணிகள் வாகனங்கள் சந்தையில் 10 % வளர்ச்சி அடைந்துள்ளது. முந்தைய ஆண்டு பண்டிகை காலத்தில் 4,96,047 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை 5,47,246 ஆக உயர்ந்துள்ளது.

இருசக்கர வாகன விற்பனை முந்தைய ஆண்டு பண்டிகை காலத்தில் 23,96,665 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை 28,93,107 ஆக உயர்ந்து 20.71 % வளர்ச்சி பதிவு செய்துள்ளது.

வர்த்தக வாகனங்கள் சந்தையில் 8.11 % வளர்ச்சி அடைந்துள்ளது. முந்தைய ஆண்டு பண்டிகை காலத்தில் 1,14,498 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை 1,23,784 ஆக உயர்ந்துள்ளது.

மூன்று சக்கர வாகன விற்பனை முந்தைய ஆண்டு பண்டிகை காலத்தில் 1,01,052 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை 1,42,875 ஆக உயர்ந்து 41.3 % வளர்ச்சி பதிவு செய்துள்ளது.

டிராக்டர் வாகன விற்பனை முந்தைய ஆண்டு பண்டிகை காலத்தில் 86,951 ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை 86,572 ஆக சரிந்து 0.44 % வளர்ச்சி பதிவு செய்துள்ளது.

Exit mobile version