Automobile Tamilan

தினமும் மாறும் பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் ?

கடந்த மே 1ந் தேதி முதல் 5 நகரங்களில் தினமும் மாறும் பெட்ரோல், டீசல் விலை அமலுக்கு வந்ததை தொடர்ந்து இதற்கு சிறப்பான ஆதரவு கிடைக்க தொடங்கியுள்ள காரணத்தால், இதனை நாடு முழுவதும் விரிவுப்படுத்த மத்திய அரசு அனுமதிக்காக காத்திருப்பதாக ஐஓசி சேர்மன் அசோக் தெரிவித்துள்ளார்.

டீசல் விலை

தற்பொழுது டைனமிக் விலை எனப்படும் சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படடையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்த்தியுள்ளது.

முதற்கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதய்பூர்,  ஜெம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் என மொத்தம் 5 மாநிலங்களில் உள்ள 200 பங்க்குகளில் தினமும் மாறும் பெட்ரோலிய பொருட்களின் விலையை அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பான  வரவேற்பினை பெற்றதாக விளங்குகின்றது.

இந்த திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்த வருவதனை ஒட்டி , இந்த திட்டத்தின் நிறைகுறைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருவதனால் அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும்  இதுபோன்றே தினமும் மாறும் விலையை செயல்படுத்துவதற்கான அரசு அனுமதி அளிக்கலாம் என நம்புவதாக ஐஓசி ஆயில் நிறுவன சேர்மன் அசோக் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது பெட்ரோல், டீசல் விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கதாகும்.

இந்தியாவில் செயல்படுகின்ற மொத்த பெட்ரோல் நிலையங்களில் 95 சதவித பங்களிப்பை  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளது. அதாவது நாட்டில் மொத்தமாக  56,190 பெட்ரோலிய டீலர்கள் செயல்படுவதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் சுமார் 52,604 பங்க்குகள் செயல்படுகின்றது.

Exit mobile version