வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் குறைப்பு

கடந்த மார்ச் 28ம் தேதி மூன்றாம் நபர் காப்பீடு கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பினால் தற்பொழுது வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு கட்டணங்களை காப்பீட்டை குறைத்துள்ளது.

3rd party insurance

3ம் நபர் காப்பீடு

 • மூன்றாம் நபர் காப்பீடு கட்டணங்கள் மார்ச் 28ந் தேதி உயர்த்தியது.
 • கனரக வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தொடர்ந்து பீரிமியம் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
 • வர்த்தக வாகனங்களுக்கு பெருமளவில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் வாகனங்களுக்கான காப்பீடு தொகையை காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் கடந்த மார்ச் 28ம் தேதி உயர்த்தி அறிவித்திருந்தது. இதற்கு கனரக வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்வு, மூன்றாம் நபர் காப்பீடு தொகை அதிகரிப்பு ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி லாரி ஸ்டிரைக் தொடங்கியது. பின்னர் மூன்றாம் நபர் காப்பீடு கட்டணத்தை குறைக்க ஐஆர்டிஏஐ உறுதி அளித்ததை தொடர்ந்து ஸ்டிரைக் கைவிடப்பட்டது.

தற்பொழுது முன்பு அறிவிக்கப்பட்ட கட்டண விகிதங்களை சற்று குறைத்து ஐஆர்டிஏஐ நேற்று உத்தரவு வெளியிட்டுள்ளது. ஆனால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள காப்பீடு பிரீமியம் கட்டணங்கள் கடந்த நிதியாண்டை விட அதிகம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

புதிய கட்டண விகிதம் வருமாறு:

 • இருசக்கர வாகனங்களுக்கு 150சிசிக்கு உட்பட்ட வாகனங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பிரீமயம் கட்டணம் ரூபாய் 569 (75சிசி வரை) மற்றும் ரூபாய் 750 (75சிசி முதல் 150சிசி) போன்றவற்றில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
 • 150 சிசி முதல் 350சிசி திறனுக்குள் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு 978ல் இருந்து  ரூ.887 ஆக குறைந்துள்ளது.
 • 350 சிசி திறனுக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கு 1,194ல் இருந்து 1019 ஆக குறைந்துள்ளது.
 • 1,000 சிசிக்கு குறைவான கார்கள் பிரீமியம் ரூ 2,055ஆக நிர்ணயிக்கப்பட்டது. எந்த மாற்றமும் இல்லை.
 • நடுத்தர கார்களுக்கு 1,000 சிசி  முதல் 1,500 சிசி காப்பீடு பிரீமியம் ரூ 3,335ல் இருந்து ரூ 2,863 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 • 1,500 சி.சி திறனுக்கு மேற்பட்ட கார்களுக்கு ரூ 9,246ல் இருந்து ரூ 7,890 ஆக குறைந்துள்ளது.
 • டிரக்குகளுக்கு பிரீமியம் அதிகயளவில் குறைக்கப்பட்டள்ளது, குறிப்பாக 40 டன் எடைக்கு மேற்பட்ட சரக்கு வாகனங்களுக்கு பிரீமியம் 36,120 தொகையிலிருந்து 33,024 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
 • மேலும் இ-ரிக்ஷா மற்றும் பிற பயணிகள் வாகன பிரீமியம் விலைகளும் குறைந்துள்ளன.
Exit mobile version