Site icon Automobile Tamilan

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

உலகளாவிய அளவில் கேடிஎம் நிறுவனத்தின் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளுடன் கூடுதலாக 990 டியூக் என அனைத்து மாடல்களிலும் எரிபொருள் டேங்கின் மூடியில் விரிசல் ஏற்படுவதாக எழுந்த புகாரினை தொடர்ந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ளது.

தர சோதனைகளின் போது, ​​MY2024யில் தயாரிக்கப்பட்ட 125 டியூக், 250 டியூக், 390 டியூக் மற்றும் 990 டியூக் ஆகியவற்றின் சில எரிபொருள் கலன் மூடி சீல்கள் தரம் சார்ந்த தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்பது கண்டறியப்பட்டதாக கேடிஎம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக, சில எரிபொருள் மூடி சீல்களில் சிறிய விரிசல்கள் ஏற்படக்கூடும், இது எரிபொருள் கசிவுக்கு வழிவகுக்கும். இதைத் தடுக்க, கேடிஎம் உரிமையாளர்கள் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் முன்பதிவு செய்து மாற்றிக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, கேடிஎம் டியூக் உரிமையாளர்கள் தங்கள் மோட்டார்சைக்கிள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இந்நிறுவன அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட்டு ‘Service’ பிரிவுக்குச் சென்று உங்கள் VIN மூலம் சரிபார்க்கலாம்.

Exit mobile version