Automobile Tamilan

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வெளியிட லீப்மோட்டார்-ஸ்டெல்லண்டிஸ் கூட்டணி

leepmotor india

இந்தியாவில் சீனாவின் லீப்மோட்டார் மற்றும் ஸ்டெல்லண்டிஸ் இணைந்து முதல் எலக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு 2024 ஆம் நான்காம் காலாண்டில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

ஸ்டெல்லண்டிஸ் மற்றும் லீப்மோட்டார் கூட்டணி மூலம் து ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளில் தங்களது எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய லீப்மோட்டார் திட்டமிட்டு இருக்கின்றது. முதற்கட்டமாக செப்டம்பர் 2024 முதல் ஐரோப்பாவின் பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கிரீஸ், நெதர்லாந்து, ருமேனியா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் என 9 நாடுகளில் தனது T03, C10 என இரு மாடல்களை சுமார் 200 டீலர்கள் மூலம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இந்தியா உட்பட தென் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் ஆசிய பசுஃபிக் பிராந்தியம், ஆப்பிரிக்கா என பல்வேறு நாடுகளில் 2024 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

இந்திய சந்தையை பொறுத்தவரை ஸ்டெல்லண்டிஸ் கீழ் உள்ள சிட்ரோன் மற்றும் ஜீப் என இரு பிராண்டுகளில் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்,  மூன்றாவதாக வரவுள்ள லீப்மோட்டாரின் எலக்ட்ரிக் வாகனங்கள் முதற்கட்டமாக சீனாவில் இருந்து முழுமையாக இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனை தொடர்ந்து இந்தியாவிலே தயாரிக்கவும் திட்டமிடப்பட்டு வருகின்றது.

இந்தியா வரவுள்ள சிறிய ஹேட்ச்பேக் ரக மாடல் 265 கிமீ ரேஞ்ச் வழங்குகின்ற லீப்மோட்டார் T03 சந்தையில் உள்ள டியாகோ இவி உட்பட சிட்ரோன் eC3 ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில் வரக்கூடும்.

அடுத்து வரவுள்ள லீப்மோட்டாரின் 420 km ரேஞ்ச் வழங்குகின்ற C10 எஸ்யூவி இந்திய சந்தையில் கிடைக்கின்ற பிஒய்டி Atto3, ZS EV,  ஹூண்டாய் கிரெட்டா இவி, மாருதி eVX ஆகியவற்றை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் 6 கார்களை விற்பனைக்கு கொண்டு வர இந்த கூட்டு நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

Exit mobile version