Automobile Tamilan

25 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்த மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர்

mahindra arjun 605 di ms

2000 ஆம் ஆண்டு மூன்று வகையில் வெளியிடப்பட்ட மஹிந்திரா அர்ஜூன் டிராக்டர் வரிசை தற்பொழுது 60 HP வரையிலான பவர் வேறுபாடுகளுடன் 2WD மற்றும் 4WD என மாறுபட்ட பயன்பாடுகளுக்கு ஏற்றதாகவும் பல்வேறு விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது.

Mahindra ARJUN Tractor

அர்ஜூன் டிராக்டர் சீரிஸில் மஹிந்திராவின் மேம்பட்ட mDI மற்றும் CRDe 4-சிலிண்டர் எஞ்சின பொருத்தப்பட்டு சிறந்த பவர் மற்றும் எரிபொருள் செயல்திறனை வழங்குகின்றன. இரட்டை கிளட்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய நிலையான மெஷ் டிரான்ஸ்மிஷன் எளிதான கியர் ஷிஃப்ட் உறுதி செய்கிறது, அதே நேரத்தில் அதிக அதிகபட்ச  மற்றும் சிறந்த முறையில் சுமைகளை கையாளுவதற்கு ஏற்றதாக உள்ளதாக மஹிந்திரா குறிப்பிட்டுள்ளது.

இந்த டிராக்டர்களை கொண்டு நிலம் தயார் செய்தல், நெல்லுக்கு சேறு அமைத்தல், ஆழமான உழவு, கரும்பு மற்று அறுவடை முடிந்த பொருட்களை எடுத்துச் செல்ல டிரையிலர் பயன்படுத்தவும்,  PTO வழியாக மற்றும் மேம்பட்ட ஹைட்ராலிக் அமைப்புகளுடன், ARJUN தொடர் விவசாயிகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், விவசாயம் மற்றும் விவசாயம் அல்லாத பயன்பாடுகளில் சிறந்த வாடிக்கையாளர் மதிப்பை அடையவும் உதவுகிறது.

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்டின் பண்ணை உபகரண வணிகத்தின் தலைவர் வீஜே நக்ராவின் கூறுகையில், அர்ஜுன் டிராக்டர் இந்தியா முழுவதும் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், மஹிந்திரா டிராக்டர்ஸ் அர்ஜுன் மாடல்களுக்கு முழுவதும் 6 ஆண்டு உத்தரவாதத்தை வழங்குகிறது, இது விவசாயிகளுக்கு அதிக மன அமைதியை வழங்குகிறது என தெரிவித்தார்.

Exit mobile version