
பெங்களூருவில் நடைபெற்று வரும் EXCON 2025 மாபெரும் கட்டுமானத் துறை சார்ந்த கண்காட்சியில் சிறிய ரக காம்பேக்டார் ஆனது தொழிற்சாலை வளாகங்கள், கிராமப்புற சாலைகள் அல்லது நகர்ப்புறங்களில் உள்ள குறுகிய சந்துகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற மஹிந்திரா நிறுவன காம்பேக்ஸ் என்ற பெயரில் சிறிய காம்பாக்டரை வெளியிட்டுள்ளது.
Compax அளவில் சிறியதாக இருப்பதால், நெரிசலான இடங்கள், நடைபாதைகள், மற்றும் குறுகிய தெருக்களில் மிக எளிதாகச் சென்று சாலை அமைக்கும் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும்.
காம்பேக்ஸ் 2.0 லிட்டர், 3-சிலிண்டர் என்ஜின் 25 hp மற்றும் 125 Nm டார்க் வெளிப்படுத்தும் நிலையில், மண், ஜல்லி அழுத்த இரட்டை அதிர்வெண் அதிர்வு முறைகளை (55/65 Hz) வழங்குகிறது. இதில் மிக உறுதியான 720 மிமீ விட்டம் கொண்ட டிரம் மற்றும் நீண்ட கால செயல்திறனுக்காக நீடித்த ஒற்றை-துண்டு அலைவு தண்டு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 2.0 லிட்டர் என்ஜின், குறைந்த எரிபொருளில் நீண்ட நேரம் உழைக்கும் திறன் கொண்டது. மேலும், இதை இயக்குவதும் பராமரிப்பதும் மிகவும் எளிது என்பதால், சிறிய அளவிலான ஒப்பந்ததாரர்கள் மற்றும் கட்டுமானப் பொறியாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
மஹிந்திரா கட்டுமான உபகரண நிறுவனம் தற்போது அதன் பிரசத்தி பெற்ற ரோட்மாஸ்டர் மூலமாக மோட்டார் கிரேடர் பிரிவில் 18 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் எர்த்மாஸ்டர் பேக்ஹோ லோடர் மண் நகர்த்தும் பிரிவிலும் கிடைக்கின்றது.
இந்தியா முழுவதும் 136 டச் பாயிண்டுகளுடன் இதில் 51 3S டீலர்ஷிப்கள், 16 சாத்தி உடன் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள், 19 சாத்தி உடன் விற்பனை நிலையங்கள் மற்றும் 50 உதிரி பாகங்கள் விற்பனை நிலையங்கள் உள்ளன. MCE அதன் இயந்திரங்களுக்கு ஒரு வருட, 2,000 மணிநேர உத்தரவாதத்தை வழங்குகிறது.