Automobile Tamil

26 % சரிவில் மஹிந்திரா நிறுவன விற்பனை நிலவரம் ஆகஸ்ட் 2019

xuv 300

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சி ஆகஸ்ட் 2019-ல் 26 சதவீதமாக பதிவு செய்துள்ளது. அதே வேளை இந்நிறுவன பயணிகள் வாகன விற்பனை மட்டும் 32 சதவீத வீழ்ச்சியாகும். யூவி மற்றும் கார் விற்பனை எண்ணிக்கை 13,507 ஆக பதிவு செய்துள்ளது. முந்தைய 2018 ஆகஸ்ட் மாதம் 19,578 ஆக இருந்தது.

மேலும் இந்நிறுவனத்தின், கார் மற்றும் வேன், எலக்ட்ரிக் கார் உட்பட ஆகஸ்ட் 2019-ல் 470 வாகனங்களை மட்டும் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2018-ல் 1866 யூனிட்டுகளாக பதிவு செய்திருந்தது. இது 70 சதவீத வீழ்ச்சியாகும்.

மஹிந்திராவின் வரத்த்க வாகனப் பிரிவும் கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆகஸ்ட் 2019 இல் மொத்தம் 14,684 யூனிட்டுகளை விற்பனை ஆகியுள்ளது. முந்தைய ஆகஸ்ட் 2018 இல் 20,326 யூனிட்டுகளை விட 28 சதவீதம் குறைந்துள்ளது.  நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் பிரிவில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 354 வாகனங்களை விற்பனை ஆகியுள்ளது, இது 69 சதவீதம் வீழ்ச்சியாகும். கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1148 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.

மூன்று சக்கரப் பிரிவில் ஆகஸ்ட் மாதத்தில் 5373 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இரண்டு சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்தில் 5289 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்து.

விற்பனை குறித்து மஹிந்திரா ஆட்டோமொடிவ் பிரிவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் வீஜய் ராம் நக்ரா கூறுகையில், “பல காரணங்களால் ஆகஸ்ட் மாதத்தில் வாகனத் தொழில் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்துள்ளது. வரவிருக்கும் பண்டிகை காலம் விற்பனையை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் ” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version