Automobile Tamilan

கார் விற்பனையில் சாதனை படைக்கும் மாருதி ஆல்டோ – Maruti Alto

இந்தியாவின் முண்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற மாடலாக விளங்கும் மாருதி ஆல்டோ கார் விற்பனையில் வெற்றிகரமாக 35 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்து தொடர்ந்து இந்தியாவின் முதன்மையான கார் மாடலாக ஆல்டோ விளங்குகின்றது.

மாருதி ஆல்டோ

இந்திய சந்தையில் முடிசூடா மன்னனாக விளங்கிய மாருதி 800 விற்பனையில் பட்டைய கிளப்பிய காலத்தில் சந்தைக்கு வந்த மாருதி ஆல்டோ 2000 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் மாருதி 800, ஹூண்டாய் சான்ட்ரோ, மாருதி ஜென் மற்றும் டாடா இன்டிகா ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வெளியானது.

2000-2003 வரையிலான நிதி ஆண்டுகளில் சராசரியாக வருடம் தோறும் 25,000 கார்களை விற்பனை செய்து வந்த நிலையில், 2003-2004 ஆம் நிதி ஆண்டில் அதிரடியாக 135 சதவீத வளர்ச்சியை பெற்ற நிலையில், கடந்த 14 வருடங்களாக இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற கார் மாடல்களில் தொடர்ந்து முதலிடத்தில் ஆல்டோ  பெற்று வருகின்றது.

2006 ஆம் ஆண்டு முதன்முறையாக 5 லட்சம் கார்கள் விற்பனை இலக்கை கடந்த ஆல்டோ, 2008 ஆம் ஆண்டு 10 லட்சம் கார்கள், 2010 ஆம் ஆண்டு 15 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், தற்போது 35 லட்சம் கார்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது.

மாருதி ஆல்டோ கார் 800சிசி மற்றும் ஆல்டோ கே10 என்ற பெயரில் 1 லிட்டர் எஞ்சின் என இரு பெட்ரோல் தேர்வுகளுடன் சிஎன்ஜி ஆப்ஷனில் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  இதில் ஆல்டோ கே 10 மாடலில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து ஆல்டோ கார் சந்தைக்கு ஏற்ற வகையில் மாறி வரும் நிலையில், மாருதியின் 2017-2018 விற்பனை நிலவரப்படி தொடர்ந்து இந்தியாவில் முதன்முறையாக கார் வாங்குபவர்களில் 55 சதவீத பேர் ஆல்டோ காரை தங்களது முதல் கார் மாடலாக தேர்வு செய்கின்றனர், மேலும் 25 சதவீத வாடிக்கையாளர்கள் தங்களது கூடுதல் காராக ஆல்டோ-வை தேர்ந்தெடுப்பதாக மாருதி சுசூகி இந்தியா விற்பனை பிரிவு இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆல்டோ கார் வாங்குபவர்களில் 44 சதவீதம் பேர் 35 வயதுக்கு குறைவானவர்கள் என்பதுடன், முந்தைய மூன்று வருடங்களில் 4 சதவீதம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஆல்டோ கார் விற்பனையில் 2016 ஆம் ஆண்டு முதல் சந்தையில் மிக கடுமையான போட்டியாளரை எதிர்கொண்டு வரும் ஆல்டோ கார் தொடர்ந்து சரிவினை கண்டு வருகின்றது.

ரெனால்ட் க்விட் கார் வருகைக்குப் பின்னர், ஆல்டோ கடுமையான சவாலினை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் விற்பனை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் ஆல்டோ விற்பனை பின்தங்க தொடங்கியுள்ளது.

Exit mobile version