Automobile Tamil

37 ஆண்டுகளில் 2 கோடி கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி

xl6

மாருதி சுசுகி கார் தயாரிப்பாளர் கடந்த 37 ஆண்டுகளில்  2 கோடி கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. முதல் 1 கோடி வாடிக்கையாளர்களை 29 ஆண்டுகளில் பெற்ற மாருதி அடுத்த 8 ஆண்டுகளில் மீண்டும் 1 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இந்தியாவில் அதிகம் கார்களை விற்பனை செய்த மிகப்பெரிய நிறுவனமாக விளங்குகின்றது.

1983 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் கார் மாடலாக மாருதி 800 உற்பத்தி செய்யப்பட்டது. 1994-1995 ஆம் ஆண்டில் முதல் முறையாக 1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த மாருதி அதன் பிறகு 2005-2006 ஆம் நிதியாண்டில் 50 லட்சம் வாகனங்களையும், 2011-12 ஆம் நிதி வருடத்தில் முதன்முறையாக 1 கோடி விற்பனை இலக்கை கடந்து சாதனை படைத்தது.

மிக குறுகிய காலத்தில் அதாவது முதல் 1 கோடி இலக்கை அடைய 29 ஆண்டுகளை எடுத்துக் கொண்ட மாருதி சுசுகி அடுத்த 8 ஆண்டுகளில் அடுத்த 1 கோடி வாடிக்கையாளர்களை இணைத்து 2 கோடி இலக்கை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளராக தொடர்ந்து பங்களிப்பை அதிகரித்து வருகின்ற மாருதி நிறுவனம் பெட்ரோல், டீசல் வாகனங்களை தொடர்ந்து அடுத்து மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்களை அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

Exit mobile version