இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளராக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனம் தங்களுடைய மாடல்களின் விலையை ரூ.1700 முதல் அதிகபட்சமாக ரூ.17,000 வரை எக்ஸ்-ஷோரூம் விலையில் உயர்த்தியுள்ளது.
முன்னர், மாருதி அறிவித்திருந்த படி விலை உயர்வு இன்று (10-01-2018) முதல் அனைத்து மாடல்களின் விலையும் ரூ.1700 முதல் ரூ.17,000 வரை உயர்த்தியுள்ளதை தொடர்ந்து நாடு முழுவதும் விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து வட்டங்களில் உள்ள மாருதியின் கார் விலை உயர்வை இந்நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
வருகின்ற பிப்ரவரி 9 முதல் 14 வரை நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் ஃப்யூச்சர் எஸ் கான்செப்ட் எஸ்யூவி உட்பட பல்வேறு மேம்படுத்தப்பட்ட மாடல்கள் உட்பட மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஆகிய மாடல்களை அறிமுக செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மோட்டார் வாகன தயாரிப்பாளர்களும் முன்பே விலை உயர்வினை அறிவித்திருந்தது நினைவுக் கூறத்தக்கதாகும்.