Automobile Tamilan

15 % வளர்ச்சி அடைந்த மாருதி சுசூகி விற்பனை – மே 2023

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி மே 2023-ல் 143,708 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டை விட 15% விற்பனை அதிகரித்துள்ளது. மே 2022-ல் 124,474 எண்ணிக்கையில் விற்பனை செய்திருந்தது.

ஹெட்ச்பேக் மற்றும் சிறிய ரக ஆல்டோ, எஸ் பிரெஸ்ஸோ கார்களின் விற்பனை எண்ணிக்கை குறைய துவங்கியிருந்தாலும், எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக ஃபிரான்க்ஸ், எர்டிகா, பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, XL6 மாடல்கள் மாருதிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

Maruti Suzuki Sales Report – May 2023

12,236 எண்ணிக்கையில் ஆல்டோ மற்றும் எஸ்-பிரஸ்ஸோ பதிவு செய்துள்ளது கடந்த ஆண்டு விற்பனையில் 17,408 எண்ணிக்கை கனிசமாக 30% சரிவடைந்தள்ளது. ஏப்ரல் 2023 மாதத்துடன் ஒப்பீடுகையில் 14,110 ஆக இருந்து 13% சரிந்துள்ளது.

இந்தியாவின் மாருதி சுசூகி எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக ஃபிரான்க்ஸ், எர்டிகா, பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, எஸ்-கிராஸ்,  XL6 மாடல்கள் 46,243 எண்ணிக்கையில் விற்பனை ஆகியுள்ளது. இது வலுவான 65% ஆண்டு வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

ஸ்ரீவஸ்தவா விற்பனை குறித்து பேசுகையில், நகர்ப்புற மையங்களை விட கிராமப்புற சந்தையில் மாருதியின் விற்பனை வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக கூறினார். “உள்கட்டமைப்புக்கான தொடர்ச்சியான செலவு கிராமப்புற வருமானத்தை இயக்குகிறது, அதே சமயம் அறுவடை மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் மாறாக உள்ளது.

Exit mobile version