Automobile Tamilan

இ விட்டாரா எலக்ட்ரிக் ஏற்றுமதியை துவங்கிய மாருதி சுசுகி

Maruti Suzuki starts the shipment of e VITARA to Europe

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி இ விட்டாராவின் முதல் லாட்டில் சுமார் 2,900 கார்களை குஜராத்தில் உள்ள பிபாவாவ் துறைமுகம் மூலம் இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஹங்கேரி, ஐஸ்லாந்து, ஆஸ்திரியா மற்றும் பெல்ஜியம் என 12 ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களால் இ விட்டாரா உற்பத்தி அதிகாரப்பூர்வமாக துவங்கிய நிலையில் தற்பொழுது ஏற்றுமதி துவங்கப்பட்டுள்ளது.

இ விட்டாரா காரினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை துவங்கியுள்ள சுசுகி இந்திய சந்தையில் விற்பனைக்கு நடப்பு ஆண்டின் இறுதி அல்லது 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிடலாம்.

இந்திய சந்தைக்கு வரவுள்ள மாடலில் 49kWh மற்றும் 61kWh என இருவிதமான பேட்டரி ஆப்ஷனை பெறுவது உறுதி செய்யப்பட்டு டாப் வேரியண்ட் 500 கிமீக்கு மேல் ரேஞ்ச் வெளிப்படுத்தும்.

இன்றைக்கு மாருதி சுசுகியின் புதிய Victoris எஸ்யூவி மாடலை ரூ.10 லட்சத்துக்குள் அரினா டீலர்கள் மூலம் வெளியிட உள்ளது.

Exit mobile version