35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

Maruti Suzuki wagonr 1

இந்தியாவில் மிகவும் பிரசத்தி பெற்ற கார்களில் ஒன்றான டால்-பாய் ஹேட்ச்பேக் என அறியப்படுகின்ற வேகன் ஆர் வெற்றிகரமாக கடந்த 26 ஆண்டுகளில் 35 லட்சத்தை கடந்துள்ளது. 1993 ஆம் ஆண்டு முதன்முறையாக வந்த வேகன்ஆரின் ஒட்டுமொத்த உலகளாவிய விற்பனை 1 கோடியை கடந்துள்ளது.

Wagon-R Sales Achivements

டிசம்பர் 1999-ல் அறிமுகமான இந்த கார், தனது உயரமான வடிவமைப்பு (Tall-boy design) மற்றும் தாராளமான இடவசதியால் இந்தியக் குடும்பங்களின் நம்பிக்கையைப் பெற்றது.

ஜப்பானில், சுஸுகி வேகன் ஆர் முதன்முதலில் செப்டம்பர் 1993ல் செமி-பானட் முறையில் மினி வேகனாக உருவாக்கப்பட்டு வசதியான மற்றும் பயன்படுத்த எளிதான காராக பெரும் புகழ் பெற்ற ஜப்பான், இந்தியா, ஹங்கேரி மற்றும் இந்தோனேசியாவிலும் தயாரிக்கப்படுகிறது.

தற்போது, ​​வேகன் ஆர் ஜப்பான், இந்தியா மற்றும் ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் 75க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 2025ல், சுஸுகி வேகன் ஆர் 1 கோடி யூனிட்களின் விற்பனையை கடந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

5வது தலைமுறை HEARTECT தளத்தில் கட்டமைக்கப்பட்ட வேகன் ஆரில் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் பிரேக்ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் உடன் கூடிய ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது.

கூடுதலாக, இந்த வேகன் ஆரில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காருக்குள் ஏறுவதையும் இறங்குவதற்கும் ஏற்றதாகவும் சுழலும் இருக்கைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version