ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

mg windsor ev inspre edition

இந்தியாவில் ஜனவரி 2026 முதல் கார் நிறுவனங்கள் விலை உயரத்த தயாராகி வருகின்ற நிலையில், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் தனது அனைத்து கார் மாடல்களின் விலையையும் 2 % வரை உயர்த்துவதாகவும், விலை உயர்வு வரும் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

வாகனத் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வதனாலும் மற்ற இதர பொருளாதாரக் காரணிகளால் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று எம்ஜி நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நிறுவனத்தின் பிரபலமான மாடல்களான ஆஸ்டர், குளோஸ்டர், ZS EV, காமெட் இவி மற்றும் வின்ட்சர் இவி என அனைத்து கார்களின் விலையும் உயர வாய்ப்புள்ளது. குறிப்பாக, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 2026 எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுகச் சலுகை விலை மட்டும் மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம்.

Exit mobile version