Automobile Tamilan

டீசல் என்ஜினுக்கு குட்பை சொல்லுங்கள் – நிதின் கட்கரி

கார், எஸ்யூவிகளில் டீசல் என்ஜின் உற்பத்தி நிறுத்த அல்லது விற்பனையை நிறுத்த வேண்டும் என இந்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்றைக்கு நடைபெற்ற SIAM 63வது ஆண்டு மாநாட்டில் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆட்டோமொபைல் தொழில்துறையினர் ‘டீசலுக்கு பை பை’ என்று சொல்லும் நேரம் வந்துவிட்டது, இல்லையென்றால், நாட்டில் டீசல் வாகனங்களை விற்க முடியாத வகையில் மாசு வரியாக 10 சதவிகிதம் கூடுதலாக வரி விதிக்க விரும்புவதாகவும் கட்கரி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அரசிடம் தற்பொழுது வரி விதிக்கும் எந்த திட்டமும் இல்லை.

Bye bye to Diesel Engine

பிஎஸ் 6 மாசு உமிழ்வு இரண்டாம் கட்ட அமலுக்கு வந்த பிற்கு பெரும்பாலான டீசல் என்ஜின் கார்கள் சந்தையில் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரீமியம் சந்தையில் தொடர்ந்து டீசல் என்ஜின் கொண்ட கார் மற்றும் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது

டீசல் குறித்து தான் கோரிக்கை மட்டும் விடுப்பதாகவும், தற்பொழுது அரசிடம் டீசல் என்ஜின் நிறுத்துவதற்கான அரசாங்கத்தால் பரிசீலிக்கப்படவில்லை” என்றும் கூறினார். மேலும், மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு இது ஒரு பரிந்துரை மட்டுமே, கட்டாயம் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version