Site icon Automobile Tamilan

5 லட்சம் கார்களை விற்பனை செய்த ரெனோ இந்தியா

இந்தியாவில் ரெனோ இந்தியா நிறுவனம் 5 லட்சம் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ள நிலையில், இந்த விற்பனையின் மொத்த எண்ணிக்கையில் ரெனோ க்விட 2.75 லட்சம் வாகனங்களாக உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ரெனோ மற்றும் ஜப்பான் நாட்டின் நிசான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவில் 2008 ஆம் சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் தொழிற்சாலையை கட்டமைக்க தொடங்கி 2010 ஆம் ஆண்டு முதல் இரு நிறுவனங்களும் உற்பத்தியை தொடங்கியது.

ரூ.4500 கோடியில் தொடங்கப்பட்ட நிசான் ரெனோ கூட்டு ஆலையில் ஆண்டுக்கு 4.80 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் பெற்றிருக்கும் நிலையில், இந்தியாவில் இரண்டு சர்வதேச வடிவமைப்பு நிலையங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற மாடல்களாக டஸ்ட்டர், ரெனோ க்விட், ரெனோ லாட்ஜி மற்றும் புதிய வரவான ரெனோ கேப்டூர் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு 98 சதவீத உதிரிபாகங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட மாடலாக விளங்கும் தொடக்கநிலை ரெனோ க்விட் மிகவும் அபரிதமான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஐந்து லட்சம் மொத்த விற்பனையில் 2.75 லட்சம் கார்கள் க்விட் பங்களிப்பாகும்.

5 லட்சம் இலக்கை கடந்ததை முன்னிட்டு ரெனோ இந்தியா பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக க்விட் காருக்கு 3.99 சதவீத வட்டியில் சிறப்பு கடன் திட்டம் வழங்குகின்றது. ரெனோ இந்தியா நாடு முழுவதும் சுமார் 350 டீலர்களை கொண்டு விளங்குகின்றது.

 

Exit mobile version