ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 % வளர்ச்சி அடைந்துள்ளது – ஐனவரி 2018

கடந்த ஜனவரி மாத விற்பனையில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், 77,878 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 31 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு விற்பனை நிலவரம்

ஐஷர் மோட்டார்ஸ் நிறுவனத்தை தலைமையாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் 350சிசி க்கு கூடுதலான சந்தையில் மிக சிறப்பான வளர்ச்சியை பெற்று வருகின்றது. குறிப்பாக இந்நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் அமோகமாக விற்பனையாகி வருகின்றது.

மொத்த விற்பனையில் கடந்த ஆண்டு ஜனவரி 2017-யில் 59,676 அலகுகளை விற்பனை செய்திருந்த என்ஃபீல்டு, கடந்த மாதம் 77,878 அலகுகளை விற்பனை செய்து முந்தைய வருடத்துடன் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 31 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

உள்நாட்டில் கடந்த வருட ஜனவரியில் 58,133 அலகுகளும், கடந்த ஜனவரி மாதம் 76,205 அலகுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மேலும் இந்நிறுவனத்தின் ஏற்றுமதி சந்தை பிரிவில் முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடம் ஜனவரியில், 1,543 அலகுகள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வருடம் 1,673 அலகுகள் விற்பனை செய்யபட்டுள்ளது.

Exit mobile version