இந்திய சந்தையில் தொடர்ந்து இருசக்கர வாகன விற்பனை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடந்த ஆண்டின் இறுதி மாதம் என்பதனால் விற்பனை சரிந்தே உள்ள நிலையில், தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா முதலிடத்தில் உள்ளது.
உள்நாட்டில் ஸ்கூட்டர் விற்பனை கனிசமாக அதிகரித்து வரும் நிலையில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்ட்ர பைக் மாடல் உள்ளது.
மொத்த பட்டியிலில் உள்ள 10 இருசக்கர வாகனங்களில் 4 பைக்குகள் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மாடல்களாகும். இதில் குறிப்பாக 125சிசி சந்தையில் ஹீரோ நிறுவனத்தின் கிளாமர் பைக் மற்றும் ஹோண்டா சிபி ஷைன் ஆகிய மாடல்களுக்கு இடையே தொடர்ந்து கடுமையான போட்டி நிகழ்ந்து வருகின்றது.
பட்டியிலில் 8வது இடத்தில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புல்லட் ரக மாடல் 47,558 அலகுகளை விற்பனை செய்துள்ள நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசை மாடல்கள் 9வது இடத்தில் உள்ளது.
முழுமையான விற்பனை பட்டியலை அட்டவனையில் காணலாம்
வ.எண் | மாடல் | டிசம்பர் -17 |
1 | ஹோண்டா ஆக்டிவா | 1,89,111 |
2 | ஹீரோ ஸ்பிளென்டர் | 1,65,110 |
3 | ஹீரோ HF டீலக்ஸ் | 1,27,932 |
4 | ஹோண்டா CB ஷைன் | 67,011 |
5 | டிவிஎஸ் XL சூப்பர் | 67,007 |
6 | ஹீரோ கிளாமர் | 63,150 |
7 | டிவிஎஸ் ஜூபிடர் | 59,483 |
8 | ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 | 47,558 |
9 | பஜாஜ் பல்சர் வரிசை | 40,879 |
10 | ஹீரோ பேஸன் | 40,168 |