Automobile Tamilan

இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளர்கள் மே 2025

tata punch ev on road price list

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகன சந்தையில் முன்னிலையில் இருந்தாலும், மஹிந்திரா மற்றும் எம்ஜி என இரண்டும் கடும் சவாலினை ஏற்படுத்த துவங்கியுள்ளது.

முதலிடத்தில் உள்ள டாடா மோட்டார்சின் எலக்ட்ரிக் கார் விற்பனை எண்ணிக்கை Vahan தரவுகளின் அடிப்படையில் மே 2025ல் சுமார் 4,319 யூனிட்டுகளை டெலிவரி வழங்கியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக எம்ஜி எலக்ட்ரிக் எண்ணிக்கை 3,732 ஆக உள்ளது. குறிப்பாக இந்நிறுவன விண்ட்சர் இவி அமோக ஆதரவினை கொண்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள மஹிந்திரா BE 6, XEV 9e ஆகிய இரண்டுக்கும் கிடைத்துள்ள அமோக வரவேற்பின் காரணமாக மஹிந்திரா சுமார் மே 2025ல் 2,604 யூனிட்டுகளை டெலிவரி வழங்கியுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக, ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 509 யூனிட்டுகளும், ஐந்தாம் இடத்தில் BYD நிறுவன எண்ணிக்கை 491 ஆக உள்ளது,  மேலும், பிஎம்டபிள்யூ நிறுவனம் 172 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது.

 

TOP 5 E-4Ws units
Tata Motors 4,319
MG 3,732
Mahindra 2,604
Hyundai 509
BYD 491
Exit mobile version