Automobile Tamilan

2024 ஏப்ரலில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்கள்

top 10 two wheelers april 2024

இந்தியாவில் 2024 ஏப்ரல் மாதம் சுமார் 18 லட்சத்திற்கும் கூடுதலான இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ள நிலையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப் இடம் பெற்றுள்ள நிலையில் அதிகப்படியான விற்பனையை எண்ணிக்கையைப் பெற்ற பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை தொகுத்து இப்பொழுது அறிந்து கொள்ளலாம்.

தொடர்ந்து நாட்டின் முதன்மையான டூவீலர் மாடலாக ஹீரோவின் ஸ்பிளெண்டர் பிளஸ் இடம் பெற்று இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து பஜாஜ் பல்சர், ஹோண்டா சைன், உள்ளிட்ட மாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த பட்டியலில் கூடுதலாக ஒரு மொபெட் மாடல் டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் உள்ளது.

டாப் 10 பைக்குகள் – ஏப்ரல் 2024

வ.எண் தயாரிப்பாளர் ஏப்ரல் 2024
1. ஹீரோ ஸ்ப்ளெண்டர் 3,20,959
2. பஜாஜ் பல்சர் 1,44,809
3. ஹோண்டா  ஷைன் 1,42,751
4. ஹீரோ HF டீலக்ஸ் 1,18,547
5. ஹீரோ HF டீலக்ஸ் 97,048
6. டிவிஎஸ் ரைடர் 51,098
7. டிவிஎஸ் அப்பாச்சி 45,520
8. பஜாஜ் பிளாட்டினா 44,054
9. டிவிஎஸ் XL சூப்பர் 41,924
10. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 29,476

அடுத்து ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரை தொடர்ந்து ஹோண்டாவின் ஆக்டிவா முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் மற்றும் சுசூகி ஆக்சஸ் போன்ற மாடல்கள் உள்ளன.

வ.எண் தயாரிப்பாளர் ஏப்ரல் 2024
1. ஹோண்டா ஆக்டிவா 2,60,300
2. டிவிஎஸ் ஜூபிடர் 77,086
3. சுசூகி ஆக்செஸ் 61,960
4. டிவிஎஸ் என்டார்க் 30,411
5. சுசூகி பர்க்மென் 17,680
6. டிவிஎஸ் ஐக்யூப் 16,713
7. யமஹா ரே 14,055
8. ஹோண்டா டியோ 12,944
9. ஹீரோ டெஸ்டினி 125 12,596
10. ஹீரோ பிளெஷர் 11,820

மேலும் படிக்க –  இந்தியாவின் சிறந்த 100சிசி பைக்குகளின் ஆன்ரோடு விலை பட்டியல்

Exit mobile version