Automobile Tamilan

டொயோட்டா எர்டிகா, சியாஸ், பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா வருகை

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனங்களுடைய ஏற்பட்ட ஒப்பந்தத்தில் , டொயோட்டா எர்டிகா, டொயோட்டா சியாஸ் , டொயோட்டா பலேனோ மற்றும் டொயோட்டா விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் இந்தியா உட்பட வெளிநாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

கடந்த 2017 பிப்ரவரி மாதம் கையெழுத்தான டொயோட்டா மற்றும் சுசூகி இடையிலான ஒப்பந்தங்களின் படி இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இரு நிறுவனங்களும் நுட்பங்களை பகிர்ந்து கொள்வதுடன், மாருதி சுசூகியின் பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா விற்பனை செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

டொயோட்டா சியாஸ் , எர்டிகா

முன்பாக ஏற்படுத்தப்பட்ட ஒபந்தத்தின்படி டொயோட்டா நிறுவனம், சுசூகி நிறுவனத்தின் பலேனோ, விட்டாரா பிரெஸ்ஸா கார்களை தனது சொந்த பேட்ஜில் உற்பத்தி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இந்த ஒப்பந்தம் மேலும் விரிவுப்படுத்தப்பட்டு கூடுதலாக  டொயோட்டா எர்டிகா, டொயோட்டா சியாஸ் கார்கள் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் கையெழுத்தாகியுள்ளது.

மேலும் எலக்ட்ரிக் வாகனங்களின் நுட்பங்களை இரு நிறுவனங்களுக்கிடைய பகிர்ந்து கொள்ள, அதன் அடிப்படையில் மாடல்களை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. டொயோட்டா தனது பெங்களூரு அருகாமையில் உள்ள தொழிற்சாலையில் முதல் விட்டாரா பிரெஸ்ஸா மாடலை 2022 ஆம் ஆண்டு உற்பத்தி செய்ய உள்ளது.

இதுதவிர டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தைக்கு உருவாக்க உள்ள சி செக்மென்ட் எம்பிவி மாடலை மாருதி சுசூகி நிறுவனம் தனது பேட்ஜில் தயாரித்து விற்பனை செய்ய உள்ளது.

மேலும் டொயோட்டா ஹைபிரிட் சிஸ்டத்தை அடிப்படையாக கொண்ட நுட்பத்தை சுசூகி சர்வதேச அளவில் பயன்படுத்த உள்ளது.  எர்டிகா, சியாஸ், பலேனோ, மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா என நான்கு கார்களை இந்தியாவில் தயாரித்து ஆப்பரிக்கா சந்தையில் டொயோட்டா விற்பனை செய்ய உள்ளது.

Exit mobile version