Automobile Tamilan

இந்தியாவில் 48 % வளர்ச்சி டொயோட்டா கார் விற்பனை நிலவரம் FY’24

toyota hilux

டொயோட்டா க்ரிலோஷ்கர் மோட்டார் நிறுவனம் FY23-24 வருடத்தில் 48 % வளர்ச்சியை பெற்று 2,63,512 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது. முந்தைய 2023 ஆம் நிதியாண்டில் 1,77,683 யூனிட்டுகளை மட்டும் டெலிவரி வழங்கியிருந்தது.

இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை பெரும்பாலும் இன்னோவா க்ரிஸ்டா, இன்னோவா ஹைகிராஸ், ஃபார்ச்சூனர், அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ரூமியன் மற்றும் ஹைலக்ஸ் போன்ற மாடல்களை உள்ளடக்கிய எஸ்யூவி மற்றும் எம்பிவிகளிடம் இருந்து பெற்றுள்ளது.

இந்நிறுவனம் மாதாந்திர மொத்த விற்பனையை 2024 மார்ச் மாதத்தில் 27,180 டெலிவரி வழங்கப்பட்டு மார்ச் 2023ல் 21,783 யூனிட்களை விற்பனை செய்திருந்தது.

TKM துணைத் தலைவர், விற்பனை மற்றும் சர்வீஸ், யூஸ்டு கார் வர்த்தகப் பிரிவு சபரி மனோகர் கூறுகையில், வாடிக்கையாளர் சார்ந்த அணுகுமுறையுடன், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகள் மற்றும் சந்தைப் போக்குகளை மதிப்பிடுவதிலும் புரிந்துகொள்வதிலும், எங்கள் பரந்த அளவிலான தரமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறந்த சேவையை வழங்குவதில் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version