இந்தியாவின் பிரபலமான எம்பிவி ரக மாடலான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆரம்ப நிலை GX வேரியண்டின் அடிப்படையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள லிமிடேட் எடிசன் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை பெற்றுள்ளது.
விற்பனையில் உள்ள GX வேரியண்ட் ரூ.40,000 வரை விலை அதிகரிக்கப்பட்டு ரூ.20.07 லட்சத்தில் கிடைக்கின்றது.
Toyota Innova Hycross
இன்னோவா ஹைக்ராஸ் ஜிஎக்ஸ் லிமிடெட் எடிஷன் காரில் முன்பக்க கிரில்லில் பிரஷ் செய்யப்பட்ட குரோம் ஜூவல் ஃபினிஷ் உடன் கூடுதலாக, டொயோட்டா முன் மற்றும் பின்புற பம்பர்களில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்னோவா இன்டிரியரில் சாஃப்ட்-டச் டேஷ்போர்டு மற்றும் கஷ்நட் பிரவுன் நிறத்தை பெற்று, இருக்கைகள் டூயல்-டோன் கருப்பு மற்றும் பிரவுன் வண்ணத்தை பெற்றுள்ளது.
172 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆனது 205Nm டார்க் வழங்குகின்றது. ஹைபிரிட் ஆப்ஷன் ஆனது இந்த மாடலில் பெறவில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.