Automobile Tamilan

டொயோட்டாவின் இன்னோவா ஹைக்ராஸ் ஒரு லட்சம் விற்பனை இலக்கை கடந்தது..!

innova hycross toyota

இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற இன்னோவா மாடலின் ஹைக்ராஸ் எம்பிவி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் விற்பனை இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ளது.

ஹைபிரிட் மற்றும் ஹைபிரிட் அல்லாத வேரியண்ட் என இரண்டு விதமாக கிடைக்கின்ற இந்த மாடலின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூபாய் 19.77 லட்சம் முதல் துவங்கி டாப் வேரியண்டின் விலை ஹைபிரிட் கொண்ட மாடல் ரூபாய் 30 லட்சத்து 98 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

173hp மற்றும் 209Nm வெளிப்படுத்தும் 2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0-லிட்டர், நான்கு-சிலிண்டர் ஹைப்ரிட் எஞ்சின் 184hp பவரை வெளிப்படுத்துகின்றது. ஹைபிரிட் மாடலில் 60% நேரத்தை மின்சார (EV) பயன்முறையில் இயக்க உதவுகிறது.

குறிப்பாக இந்த காருக்கான வெயிட்டிங் பீரியட் என்பது தொடர்ந்து மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இருக்கின்ற நிலையில் மாதம்தோறும் நான்காயிரத்திற்கும் கூடுதலாக எண்ணிக்கையில் டெலிவரி வழங்கப்பட்டு வருகின்றது கடந்த 2022 நவம்பர் மாதத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version