Automobile Tamilan

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

2024 toyota hyryder festival edition

டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அர்பன் க்ரூஸர் ஹைரைடரில் சுமார் 11,529 கார்களில் எரிபொருள் இருப்பினை மிக துல்லியமாக கிளஸ்ட்டரில் வழங்காத கார்களை திரும்ப அழைக்க உள்ளது.

ஏற்கனவே, இதன் ரீபேட்ஜிங் மாடலான மாருதி கிராண்ட் விட்டாரா திரும்ப அழைக்கப்பட்டதை தொடர்ந்து டொயோட்டா நிறுவனமும் அறிவித்துள்ளது.

டிசம்பர் 9, 2024 முதல் ஏப்ரல் 29, 2025 வரை தயாரிக்கப்பட்ட 39,506 ஹைரைடர் எஸ்யூவி கார்களை திரும்பப் பெறுவதாக இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாகனங்களில் சிலவற்றில் உள்ள ஸ்பீடோமீட்டர் அசெம்பிளியில் உள்ள எரிபொருள் இருப்பினை காட்டுவதற்கான, எச்சரிக்கை விளக்கு, எரிபொருள் நிலையை துல்லியமாக பிரதிபலிக்காமல் போகலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள், டொயோட்டா அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடம் இருந்து, குறைபாடுள்ள பாகத்தை ஆய்வு செய்து இலவசமாக மாற்றித் தர உள்ளனர்.

Exit mobile version