Automobile Tamilan

தமிழ்நாட்டில் நுழையும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் வின்ஃபாஸ்ட்

vinfast vf6

வியட்நாம் நாட்டை தலைமையிடமாக கொண்ட வின்ஃபாஸ்ட் (Vinfast Auto) எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் தமிழ்நாட்டில் தனது ஆலையை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்ட முதலீடு தொடர்பான அறிவிப்பு உலக முதலீட்டாளர்கள் 2024 மாநாடு அரங்கில் கையெழுத்தாகலாம்.

டெஸ்லா எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் தனது ஆலையை துவங்க திட்டமிட்டுள்ள நிலையில், வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்க வாய்ப்புள்ளது.

Vinfast EV

உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரான BYD மற்றும் டெஸ்லா ஆகியவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம தன்னுடைய மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான முக்கிய தொழில்நகரமான தூத்துக்குடியில் தன்னுடைய பேட்டரி தயாரிப்பு ஆலை மற்றும் வாகனங்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ராய்ட்ர்ஸ் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர் கார், பேருந்து மற்றும் ஸ்கூட்டர் என மூன்று பிரிவில் சந்தையை விரிவுப்படுத்தி உள்ளது. எனவே, இந்தியாவில் கார் மட்டுமல்லாமல் வின்பஸ் மற்றும் ஸ்கூட்டர் சந்தையிலும் களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.

வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கின்ற  தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM) 2024 அரங்கில் பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான முதலீடு பற்றி அறிவிப்புகள் வெளியாகலாம்.

Exit mobile version