Automobile Tamilan

சென்னை ஆலையில் 50 லட்சம் டூ வீலர்களை உற்பத்தி செய்த யமஹா

Chennai Plant Milestone Celebrations 1

இந்தியா யமஹா மோட்டார் சென்னையில் அமைந்துள்ள தொழிற்சாலையில் உற்பத்தி துவங்கிய 10 ஆண்டுகளில் சுமார் 50 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து இந்தியா உட்பட ஐரோப்பா, லத்தின் அமெரிக்கா, ASEAN உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இந்த தொழிற்சாலையின் மொத்த உற்பத்தியில் 30% க்கும் அதிகமானவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன, குறிப்பாக  FZ சீரிஸ், சலுயூட்டோ மற்றும் ஆல்ஃபா ஸ்கூட்டர் ஆகியவற்றையும் உற்பத்தி செய்கிறது. இதுதவிர இந்த ஆலையில் 125சிசி ஹைபிரிட் ஸ்கூட்டர்களான ரேZR 125 Fi மற்றும் ஃபேஸினோ 125 Fi  கூடுதலாக பெர்ஃபாமென்ஸ் ரக ஏரோக்ஸ் 155சிசி உற்பத்தி செய்யப்படுகின்றது.

177 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆலையில் 50 லட்சமாவது மாடலாக ஏரோக்ஸ் உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த யமஹா மோட்டார் இந்தியா குழும நிறுவனங்களின் தலைவர் திரு. இடாரு ஓட்டானி, யமஹாவின் சென்னை ஆலை உலகளாவிய யமஹா தொழிற்சாலைகளில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்குகின்றது.

திறமையான பணியாளர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகளுடன் உலகளாவிய தரத்திற்கான வலுவான அர்ப்பணிப்பு பெற்றுள்ளது.

Exit mobile version