Site icon Automobile Tamil

ஃபோர்டு ஆஸ்திரேலியா ஆலையை மூடுகின்றது

ஃபோர்டு ஆஸ்திரேலியா பிரிவு ஆலையை மூட ஃபோர்டு முடிவு செய்துள்ளது. 1925 முதல் செயல்பட்டு வரும் மிக பழமையான ஆஸ்திரேலியா ஆலையை மிக கடுமையான நஷ்டத்தால் 2016 ஆண்டு முதல் ஆலையை மூட உள்ளதாம்.
ஆஸ்திரேலியவில் உள்ள இரு ஆலைகளும் மூடப்பட்டால் நேரடியாக 1200க்கு மேற்பட்ட தொழிலார்களுக்கு வேலை இழப்பு ஏற்படும். மேலும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் ஆலைகள் உட்ப்பட இன்னும் பல தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்.
கடந்த நிதி ஆண்டில் சுமார் ரூ.3996 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். அந்நாட்டு அரசு வழங்கிய வரிசலுகைகளும் எடுபடவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் நல்ல லாபத்தினை அடையும் பொழுது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் மிக பெரும் நட்டத்தை அடைந்துள்ளது.
ஆஸ்திரேலியா டீலர்களை தொடர்ந்து பராமரிக்க உள்ளதாம். வெளிநாடுகளில் இருந்து மட்டும் கார்களை இறக்குமதி செய்ய உள்ளதாக தெரிகின்றது.
மிக பெரும் நஷ்டத்திற்க்கு காரணம் ஆஸ்திரேலியாவில் கார் தயாரிக்கும் செலவுகள் ஐரோப்பாவைவிட இரண்டு மடங்கும் ஆசியாவைவிட கால் மடங்கும் அதிகமாம்.
Exit mobile version