ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி ஜனவரி 20 முதல்

வரும் ஜனவரி 20ந் தேதி ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி கார் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் என இருவிதமான என்ஜின் ஆப்ஷனில் வருகின்றது.

ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி

கடுமையான சவால்கள் நிறைந்த பிரிமியம் எஸ்யூவி கார் சந்தையில் தனித்துவமான மாடலாக விளங்கும் ஃபோர்டு எண்டேவர் எஸ்யூவி காரின் போட்டியாளர்கள் ஃபார்ச்சூனர் , ட்ரெயில்பிளேசர் , பஜெரோ ஸ்போர்ட் , ரெக்ஸ்டான் , சான்டா ஃபீ போன்ற மாடல்களுடன் போட்டியை எதிர்கொள்ளும்.

158bhp ஆற்றலை வழங்கும் 2198cc TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 385Nm ஆகும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் என இருவிதமான கியர் ஆப்ஷனில் உள்ளது.   2 வீல் டிரைவ் மற்றும்  ஆல் வீல் டிரைவ் உள்ளது

198bhp ஆற்றலை வழங்கும் 3198cc TDCI டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 450Nm ஆகும். இதில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர் ஆப்ஷனில் மட்டுமே உள்ளது.  ஆல் வீல் டிரைவ் மட்டுமே உள்ளது.

ஃபோர்டு என்டெவர் வேரியண்ட் விபரம்

  • ஃபோர்டு என்டேவர்  2.2L 4×2 MT Trend
  • ஃபோர்ட் என்டெவர்  2.2L 4×2 AT Trend
  • ஃபோர்டு எண்டேவர்  2.2L 4×4 MT Trend
  • ஃபோர்டு என்டேவர் 2.2L 4×2 AT Titanium
  • ஃபோர்டு என்டேவர் 3.2L 4×4 AT Trend

 

தொடர்புடையவை ;

ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி முழுவிபரம்

எண்டேவர் எஸ்யூவி காரின் படங்கள் மற்றும் பிரவுச்சர் விபரம்

[envira-gallery id=”4677″]

Share