அசோக் லேலண்ட் ஸ்டைல் எம்பிவி விலகியது

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஸ்டைல் எம்பிவி பெரிதான விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்ய தவறியதனால் ஸ்டைல் காரின் விற்பனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

நிசான் மற்றும் அசோக் லேலண்ட் நிறுவனங்களின் கூட்டணியில் செயல்பட்டுவரும் இலகுரக வர்த்தக வாகன பிரிவில் ஸ்டைல் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

நிசான் எவாலியா என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வரும் தனிநபர் பயன்பாட்டு வாகனத்தினை லேலண்ட் ஸ்டைல் என்ற பெயரில் கூடுதல் வசதிகளுடன் வர்த்தக பயன்பாட்டிற்க்கு மட்டுமே விற்பனை செய்து வந்தது.

பாக்ஸ் வடிவம் கொண்ட ஸ்டைல் பெரிதாக இந்திய சந்தையில் எடுபடவில்லை. நிசான்- அசோக் லேலண்ட் கூட்டணியில் எந்த மாற்றங்களும் இல்லை தொடர்ந்து தோஸ்த் மற்றும் புதிய இலகுரக வாகனங்கள் மற்றும் பேருந்து தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளதாம்.

Share