Automobile Tamilan

ஆடி மொபைல் ஷோரூம் அறிமுகம்

ஆடி சொகுசு கார் நிறுவனம் புதிய மொபைல் ஷோரூமை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆடி மொபைல் டெர்மினல் இன்னும் 12 மாதங்களில் 30க்கு மேற்பட்ட நகரங்களை மொபைல் ஷோரூம் பார்வைக்கு வரவுள்ளது.
27958 audi mobile terminal india

ஆடி நிறுவனம் ”ஆடி மொபைல் டெர்மினல் ” என்ற பெயரில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களை தேடி மொபைல் டீலரை அனுப்ப உள்ளது. இதன் மூலம் 2000 புதிய வாடிக்கையாளர்களை இணைக்க திட்டமிட்டுள்ளத்து.

ஓவ்வொரு நகரங்களில் இரண்டு நாள் பயணிக்க திட்டமிட்டுள்ள மொபைல் ஷோரூமில் நேரடியான ஆடி டீலரிடன் செல்லும் அனுபவத்தினை வழங்க வல்ல அம்சங்களான காரினை பார்வையிடுவது , விசாரிப்பு , முன்பதிவு , டெஸ்ட் டிரைவ் போன்ற அம்சங்களை இந்த மொபைல் ஷோரூம்கள் வழங்கும்.

இந்த வாகனத்தில் அனைத்து விதமான சேவைகளும் வழங்க திட்டமிட்டுள்ளனர் . மேலும் வரும் 2020க்குள் ஆடி நிறுவனம் இந்திய சந்தையை தனது பெரிய சந்தைகளில் ஒன்றாக  நிலை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

Audi Mobile Terminal launched in India

Exit mobile version