12 வயதில் இந்தியாவின் முதல் கார்டிங் சாம்பியன் பட்டம் வென்ற மொஹ்சின்

ஆசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று 12 வயது சிறுவன் சஹான் அலி மொஹ்சின் இந்தியாவின் முதல் கார்டிங் சாம்பியன் என்ற பெருமையை பெற்றுள்ளார். மலேசியாவில் ஆசிய கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

மிக சிறப்பான முறையில் வெற்றி பெற்றுள்ள அலி மொஹ்சின் இரண்டு இடங்களை பிடித்த ஹேடன் ஹாய்கல் மற்றும் அமர் ஹாரிஸ் போன்றவர்கள் அடுத்தடுத்து 0.2 விநாடிகள் இடைவெளியில் வெற்றிபெற்றுள்ளனர்.

போட்டியாக முன்னதாக கலந்து கொள்ள வேண்டிய இரு பயற்சி போட்டிகளில் பங்கேற்க முடியாத வகையில் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருந்த அலி மொஹ்சின்  இறுதிபோட்டியில் மிக சிறப்பாக கார்டிங் செய்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

இறுதிபோட்டிக்கு முன்னதாக நடைபெறும் இரண்டு ஹீட் ரேஸ் போட்டிகளிலும் சிறப்பாக கார்டிங் செய்து மைக்ரோ மேக்ஸ் சாம்பியன் பட்டியலில் 5 புள்ளிகளுடன் முன்னிலை வகித்த மொஹ்சின் இவருக்கு அடுத்தப்படியாக ஹேடன் இருந்துள்ளார்.

இறுதி சுற்றுக்கு முந்தைய சுற்று மற்றும் இறுதி சுற்று என இரு போட்டிகளிலும் ஹாரீஸ் வெற்றி பெற்றாலும் புள்ளிகளின் அடிப்படையில் சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்திய மொஹ்சின் முன்னிலை வகித்து இந்தியாவிற்கு முதல் கார்டிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தந்துள்ளார்.

 

8 வயது முதலே கார்டிங் பந்தயங்களில் பங்கேற்பதற்கான FMSCI லைசென்ஸ் பெறலாம். FMSCI லைசென்ஸ் பெறும் முறையை முன்பே பதிவிட்டிருந்தோம். ரேஸ் வீரராக உருவாகுவது எப்படி

Exit mobile version