Site icon Automobile Tamil

இந்தியாவில் பழைய கார் விற்பனை அமோகம் – ரிபோர்ட்

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பழைய கார் விற்பனை வளர்ச்சி அபரிதமாக உள்ளதாக இந்திய கார் சந்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை India Pre-Owned Car Market Report என்ற பெயரில் பழைய கார் சந்தை பற்றிய தகவலை இந்தியன் பூளூபுக் வெளியிட்டுள்ளது.

இந்தியா, சீனா , அமெரிக்கா என மூன்று நாடுகளை கொண்டு பல ஒப்பீடுகள் செய்யப்பட்டுள்ள ரிபோர்டில் வெளியாகியுள்ள பல சுவாரஸ்ய தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. சீனா ,அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பீடுகையில்  1000 இந்தியர்களுக்கு 22 பேரிடம் மட்டுமே கார்கள் உள்ளது. சீனாவில் 1000 நபருகளுக்கு 113 பேரிடமும் ,அமெரிக்காவில் 1000 நபர்களுக்கு 809 நபர்களிடம் கார்கள் உள்ளது.

2.  2020 ஆம் ஆண்டில் உலகின் 5வது மிகப்பெரிய ஆட்டோமோட்டிவ் சந்தையாக இந்தியா விளங்கும்.

3. வருடத்தில் 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து 3.3 மில்லியன் பழைய கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

4. பயன்படுத்திய கார் விற்பனையின் மொத்த பங்கில் 55 சதவீதம் மெட்ரோ அல்லாத பகுதிகளிலும் 45 சதவீத கார்கள் மெட்ரோ பகுதியிலும் விற்பனை ஆகின்றதாம்.

5. பழைய கார் விற்பனையில் 36 சதவீத பங்களிப்புடன் வட இந்தியா முன்னிலை வகிக்கின்றது ,அதனை மேற்கிந்தியா 27 சதவீதம் ,தென்னிந்தியா 26 சதவீதம் மற்றும் கிழக்கில் 11 சதவீத பங்களிப்பினை வழங்குகின்றது.

6. பழைய கார் வாங்குபவர்களில் முதன்முறையாக குடும்பத்திற்கு வாங்குபவர் 55 சதவீதம் ஆகும்.

7. டீலர்கள் சராசரியாக மாதம் 6 கார்களை விற்பனை செய்கின்றனர்.

8. நிதி உதவியில் கார் வாங்குபவர்களில் மாதம் 1.50 லட்சம் புதிய கார்களுக்கும் , பயன்படுத்திய கார்களுக்கு 30,000 என்கின்ற எண்ணிக்கையில் சராசரியாக நிதியளித்தல் வாங்கப்படுகின்றது.

9. சராசரியாக இந்தியாவின் குறைந்த இணைய வேகம் 2.8 mbps முதல் அதிகபட்சமாக 21.2 mbps ஆகும் . சீனாவில்  குறைந்த இணைய வேகம் 4.1 mbps முதல் அதிகபட்சமாக 26.7 mbps மற்றும் அமெரிக்காவில் குறைந்த இணைய வேகம் 14.2 mbps முதல் அதிகபட்சமாக 61.5 mbps ஆகும்.

10. பயன்படுத்திய கார் வாங்குபவர்களின் சராசரி வயது 24-34 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்ள India Pre-Owned Car Market Report பிடிஎஃப் ஃபைலை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்…

டவுன்லோட் முகவரி ; பழைய கார்கள்

 

Exit mobile version