உலகின் மிக வேகமான எலக்ட்ரிக் ரேஸ் கார் ட்ரேசன்

உலகின் மிக வேகமான எலக்ட்ரிக் ரேஸ் கார் என்ற சாதனையை  பிரிட்டன் ட்ரேசன் டெக்னாலஜிஸ் கார் பெற்றுள்ளது. லோலா பி12 69/ இவி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 328.6 கிமீ வேகத்தை தொட்டுள்ளது.யார்க்சிரில் உள்ள ஆர்ஏஃஎப் ரேஸ் டிராக்கில் இந்த சாதனையை நிகழ்த்தியது. 
 Drayson Racing
கடந்த வாரம் நிசான் நிறுவனம் லீ மேன்ஸ் போட்டியில் ஜியிஒட் ஆர்சி (ZEOD RC Zero Emission On Demand Racing Car) என்ற எலக்ட்ரிக் ரேஸ் காரை பார்வைக்கு வைத்தது. இந்த காரானது பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டிலும் செயல்படும். மேலும் இந்த காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 300 கிமீ என கூறியது. எனவே இந்த கார்தான் உலகின் வேகமான எலக்ட்ரிக் ரேஸ் கார் கடந்த வாரம் சொல்லப்பட்டாலும் இந்த வாரம் ட்ரேசன் மணிக்கு 328 கிமீ என்ற வேகத்தினை எட்டியுள்ளது.
2014 செப்டம்பர் மாதம் முதன்முதலாக தொடங்க உள்ள எலக்க்ட்ரிக் ரேஸான ஃஎப்ஐஏ பார்முலா இ சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு பல முன்னணி நிறுவனங்கள் மிக விரைவாக தங்களை தயார்ப்படுத்தி வருகின்றன.
Exit mobile version