முதன்முறையாக ஸ்விடன் நாட்டில் மின்சாரத்தில் இயங்கும் உலகின் முதல் மின்சார சாலை போக்குவரத்து அதிகார்வப்பூர்வமாக விரைவில் திறக்கப்பட உள்ளது. ஸ்கேனியா மற்றும் சைமன்ஸ் இணைந்து உலகின் முதல் எலக்ட்ரிக் சாலையை திறக்க உள்ளது.
வருகின்ற 2030 ஆம் ஆண்டில் புதைபடிவ எரிபொருள் இல்லா நாடாக உருவெடுக்கும் நோக்கில் முதற்கட்டமாக எலக்ட்ரிக் சாலையை அமைத்துள்ளது. இந்த சாலையின் வாயிலாக கனரக வாகனங்கள் டீசல் எரிபொருளை பயன்படுத்தாமல் மின்சாரத்தின் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
தற்பொழுது சோதனை ஓட்டநிலையில் உள்ள எலக்ட்ரிக் சாலையில் அடுத்த சில ஆண்டுகளில் முழுமையான பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் சாலையில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் அங்கமான ஸ்கேனியா நிறுவனத்தின் ஹைபிரிட் டிரக்குகளை கொண்டு செயல்படும்.
மாடல் : Scania G 360 4×2 ( 9 டன் டிரக் )
பவர்டெரியன் : Parallell hybrid, integrated in the gearbox (GRS895)
என்ஜின் : 13-litre, 360 hp (runs on biofuel)
மின்சார மோட்டார் : 130kW, 1050Nm Battery : Li-Ion 5 kWh (gives a driving range up to 3 km when not running on the e-way) System voltage : 700V
ரயில்கள் தண்டவாளத்தில் இயங்குவதனை போல வடிவமைக்கப்பட்டுள்ள பவர் கிரில் வாயிலாக மின்சார ஆற்றலை பயன்படுத்தி கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சாலையில் ஜி 360 டிரக் பை எரிபொருள் மற்றும் மின்சார மோட்டார் உதவியுடன் செயல்படும். மாசு உமிழ்வு மற்றும் புதைபடிவ எரிபொருள் போன்ற பிரச்சனைகளுக்கு மிக முக்கிய தீர்வாக இந்த திட்டம் அமையலாம்.
எல்க்ட்ரிக் சாலையின் வீடியோ
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…