Automobile Tamilan

இந்தியாவில் 30 வருடம் இங்கிலாந்தில் 28 வருடம் : ஐஎன்எஸ் விராட்

உலகின் மிகவும் பழமையான போர்கப்பலும் இந்தியாவின் வரலாற்றை பறைசாற்றும் ஐஎன்எஸ் விராட் விமானந்தாங்கி கப்பல் இன்றுடன் தனது சேவையிலிருந்து பிரியா விடைபெறுகின்றது. 1944 ஆம் ஆண்டு தொடங்கி ஐஎன்எஸ் விராட் வரலாறு 2017 ஆம் ஆண்டு நிறைவடைகின்றது.

 

ஹெர்மிஸ் முதல் ஐஎன்எஸ் விராட் வரை

ஹெச்.எம்.எஸ்.ஹெர்மிஸ் கப்பல் படம்

விராட் என்னவாகும் இனி ?

ஆந்திர மாநில அரசு விராட் கப்பலை வாங்கி,  விசாகப்பட்டினம் அருகில் போர்க்கப்பல் அருங்காட்சியகமாகவும், சொகுசு விடுதியாகவும் மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதற்கு ரூ.1000 கோடி வரை செலவு பிடிக்கும் என கணக்கிட்டுள்ளது.

இந்தியாவின் முதல் விமான தாங்கி விக்ராந்த் கப்பலை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உடைத்து அதன் மெட்டல் பாகங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பஜாஜ் வி என்ற பிராண்டினை உருவாக்கி வி15 மற்றும் வி12 மோட்டார் சைக்கிள் மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த பைக்குகளில் இடம்பெற்றுள்ள பெட்ரோல் டேங்க் மட்டுமே விக்ராந்த் கப்பலின் மெட்டல் பாகமாகும்.

ஒருவேளை ஆந்திர அரசு இந்தக் கப்பலை வாங்கவில்லை எனில் ஏலம் விடப்பட்டு மெட்டல் பாகங்களுக்கு உடைக்கப்படும் என்பதனால் மீண்டும் இந்த மெட்டல் பாகங்களை பஜாஜ் வாங்க வாய்ப்புகள் உள்ளது.

 

Exit mobile version