விடை பெறும் கூகுள் ஃபயர்ஃபிளை தானியங்கி கார்..!

தானியங்கி கார் தொடர்பான ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஆல்ஃபாபெட் வேமோ நிறுவனத்தின் கூகுள் ஃபயர்ஃபிளை என அழைக்கப்படுகின்ற தானியங்கி கார் விடை பெறுகின்றதாக கூகுள் அறிவித்துள்ளது.

கூகுள் ஃபயர்ஃபிளை

கடந்த 2013 ஆம் ஆண்டில் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ஸ்டீயரிங், பெடல்கள் என எதுவுமே இல்லாத முதல் முழுமையான தானியங்கி கார் சோதனை ஓட்டத்திற்கான முயற்சியை கூகுள் மேற்கொண்டது. அதன் பலனாக 2015 ஆம் ஆண்டில் முதன்முறையாக கூகுள் தானியங்கி கார் சாலை சோதனைக்கு வந்தது.  இன்றைக்கு பல்வேறு நிறுவனங்களும் தானியங்கி கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டி வருகின்ற சூழ்நிலையில் கூகுள் நிறுவனம் முதன்மையாக உருவாக்கி ஒரு சிறிய பாட் வடிவ தோற்றம் அதாவது அவரை விதை போன்ற தோற்ற அமைப்பை பெற்ற கோலா காரை கூகுள் உருவாக்கியது,அதனையே பிற்காலத்தில் Google Firefly என அழைபக்கப்பட்டு வந்தது.

இரு இருக்கைகளை பெற்ற இது தானியங்கி காருக்கான சோதனை ஓட்டத்தை மூன்று ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது இந்த கார் விடை பெற உள்ளதாக வேமோ குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது கூகுள் வேமோ நுட்பத்தை பெற்ற 600 கிறைஸலர் பசுஃபிகா மினி வேன்கள் மிக வேகமான மற்றும் துல்லியமான சோதனை ஓட்டத்தில் பல்வேறு மேம்பட்ட திறன்களுடன் இயங்கி வருவதனாலும், அதிகபட்சமாக மணிக்கு 45 கிமீ வேகத்தில் மட்டுமே பயணிக்கும் திறன் பெற்றிருநந்த இந்த ஃபயர்ஃபிளை கார் பல்வேறு தர சோதனைகளுக்கு மிக உறுதுனையாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் இறுதியாக விளக்கி கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளனர்.

தற்போது ஃபியட் கிறைஸலர் நிறுவனத்தின் 600 தானியங்கி பசுஃபிகா மினிவேன்கள் வேமோ நுட்பத்துடன் சாலைகளில் இயங்கி வருகின்றது. சோதனை ஓட்ட முழுமை அடைந்து விட்டதால் தானியங்கி கார் விற்பனை மற்றும் அதன் பயன்பாடுகள் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் விரிவுப்படுத்தப்படலாம்.

Exit mobile version