சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்

மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக விளங்கும் சாங்யாங் டிவோலி காம்பெக்ட் எஸ்யூவி கார் தென்கொரியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டிவோலி கார் நேரடியான மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு வராது.

மஹிந்திராவின் கீழ் செயல்பட தொடங்கிய பின்னர் சாங்யாங் மோட்டார்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள முதல் காம்பெக்ட் எஸ்யூவி டிவோலி ஆகும்.

SsangYong Launches Tivoli

புதுவிதமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் நீளம் 4195மிமீ கொண்டுள்ளது. நவீன வசதிகளை பெற்று விளங்குகின்றது.
டிவோலி எஸ்யூவி காரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 165பிஎஸ் மற்றும் டார்க் 157என்எம் ஆகும். 6 வேக மெனுவல் மற்றும் 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கும்.

7 இஞ்ச் தொடுதிரை, பகல் நேர விளக்குகள், தானியங்கி முகப்பு விளக்குகள் என பல வசதிகளை கொண்டுள்ளது.

இந்திய விலைப்படி சாங்யாங் டிவோலி கார் விலை; ரூ.9.3 லட்சம் முதல் 13.53 லட்சம் வரை விற்க்கப்படுகின்றது.

டிவோலி காரினை அடிப்படையாக கொண்ட 4 மீட்டருக்கு குறைவான நீளத்தினை கொண்ட மாடலாக புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரை மஹிந்திரா இந்தியாவில் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SsangYong launch Tivoli compact suv in South Korea

Exit mobile version