Automobile Tamilan

சிட்டி மற்றும் மொபிலியோ கார்களை திரும்ப அழைக்கும் : ஹோண்டா

ஹோண்டா சிட்டி மற்றும் மொபிலியோ என இரண்டு டீசல் கார் மாடல்களிலும் எரிக்கப்படாத எரிபொருளை திரும்ப எடுத்துச் செல்லும் குழாயில் பிரச்சனை உள்ளதால் திரும்ப அழைக்க உள்ளதாக ஹோண்டா நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

honda-city

எரிபொருளை திரும்ப எடுத்து செல்லும் குழாய் கழன்று எரிபொருள் வெளியேறும் நிலை உள்ளதால் வாகனம் இயங்காமல் போக வாய்ப்பு உள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. எனவே இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக 90,210 சிட்டி மற்றும் மொபிலியோ கார்கள் திரும்ப பெறப்பட உள்ளது.

பிரச்சனை உள்ள எரிபொருள் திரும்ப எடுத்துச் செல்லும் குழாய் எவ்விதமான கட்டனமும் இல்லாமல் இலவசமாக மாற்றி தரப்படும். 2013ம் ஆண்டு டிசம்பர் முதல் 2015 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட 64,428 ஹோண்டா சிட்டி டீசல் கார்களும், கடந்த 2014ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2015 ஜூலை வரை தயாரிக்கப்பட்ட 25,782 மொபிலியோ டீசல் கார்களும் திரும்ப அழைக்கப்பட உள்ளன.

உங்கள் காரும் பாதிக்கப்பட்டுள்ளதா என தெரிந்துகொள்ள உங்கள் வாகனத்தின் 17 இலக்க வின் (Vehicle Identification Number- VIN ) எனப்படும் வாகனத்தின் எண்ணை கீழுள்ள இனைப்பின் வழியாக சென்று பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

ரீகால் முகவரி ; https://hondacarindia.com/PUD5VG/6FRPUDCustomerInquiry.aspx

Exit mobile version